தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து போலீசாருக்கு புதிய எல்.இ.டி., கைக்கருவிகள் வழங்கல்! - LED, handheld

குன்னூரில் போக்குவரத்து போலீசாருக்கு நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் எல்.இ.டி., கைக்கருவிகள் வழங்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு எல்.இ.டி., கைக்கருவிகள்
போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு எல்.இ.டி., கைக்கருவிகள்

By

Published : Dec 21, 2020, 11:08 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் லெவல் கிராசிங், பேருந்து நிலையம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட இடங்களில் சிக்னல் ஏதும் கிடையாது. இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலிருக்க போக்குவரத்து காவல் துறையினர் கைகளால் சைகைக் காட்டி வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு எல்.இ.டி., கைக்கருவிகள்

இதில் லெவல் கிராசிங் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், மீண்டும் செல்லவும் கூறும் போது அதைச் சரியாக புரிந்து கொள்ளாமல் சில ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறிவிடுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில், புதிய எல்.இ.டி., கைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் ஒளிரும் வசதியிருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் குழப்பமின்றி செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், புதிய எல்.இ.டி. விளக்கு கொண்ட டிவைடர்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details