தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியாவை ஏளனமாகப் பார்த்த நாடு ரஷ்யா' - கலங்கிய மயில்சாமி அண்ணாதுரை

நீலகிரி: ஒரு காலத்தில் நம் நாட்டு ஏவுகணையை ஏவ மற்ற நாடுகளிடம் கையேந்தி நின்ற நிலை மாறி, தற்போது நம் ஏவுகணை மூலம் வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு முன்னேறியுள்ளோம் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

mayilsamy annadurai
mayilsamy annadurai

By

Published : Dec 11, 2019, 11:33 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ' இன்றைய தலைமுறையினர் விவசாயத்தை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ள வேண்டும். இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் தொடக்க காலத்தில் சிறிய கட்டடத்தில் செயல்பட்டது. குறைந்த எடை கொண்ட செயற்கைக் கோள்களை தயாரித்து, அதனை விண்ணில் ஏவ ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஏவினோம்.

மாணவர்களிடம் உரையாடிய இஸ்ரோ முன்னாள் தலைவர்

அந்தச் சூழலில் இந்தியாவின் செயற்கைக் கோள்களை ரஷ்யா கேவலமாக பார்த்தனர். 1988ஆம் ஆண்டு முதல் நம் நாட்டு செயற்கைக்கோள்களை சொந்தமாக தயாரித்து ஏவி வருகிறோம். நம் பி.எஸ்.எல்.வி ஏவுகணை மூலம் வெளிநாடு செயற்கைக்கோள்களை ஏவும் அளவிற்கு முன்னேறியுள்ளது. பாரதியார் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி c-48 வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

இதையும் படிங்க: 'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details