நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உதகை அருகேயுள்ள மஞ்சனக்கொரை பகுதியிலும், அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனப்பகுதியிலும் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் மீட்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளை வீசிச் செல்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறையும் இணைந்து தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உண்டு உறைவிடப்பள்ளி முன்பு தொட்டிலை வைத்துள்ளது.