நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் கட்டடம் கட்டவும், கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், தடைகளை நீக்கக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை முழு கடை அடைப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த போராட்டங்களை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் சந்தித்தார். அப்போது, 'கல்லட்டி மலைபாதையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது' என்றார்.