நீலகிரி: குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனையடுத்து உடனடியாக விபத்து நடைபெற்ற பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டி உள்ளிட்டவைகளை கைப்பற்றும் முயற்சியிலும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர் பொருட்கள் அகற்றும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் தொடர்பான காணொலி இந்நிலையில் விசாரணை கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் இன்று (டிசம்பர் 25) ஈடுபட்டனர். சாலையை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உடைந்த பாகங்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்வது குறித்து ராணுவ அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சில சிதைந்த ராட்சத ஹெலிகாப்டர் பாகத்தை மீண்டும் உடைத்த ராணுவ வீரர்கள் அவற்றை லாரியில் ஏற்றினர். ஹெலிகாப்டர் பாகங்கள் கோவை சூலூர் விமானப்படைக்கு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் உடைந்த ஹெலிகாப்டர் பாகங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:NEET Suicide:நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை..!