நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் பல அரிய வகை தாவரங்கள் திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றது.
'மல்த்ஜியா பழத்தில்' நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதா?
நீலகிரி: கூடலூர் பகுதியில் விளையும் மல்த்ஜியா என்ற அரிய வகை இந்தியன் செர்ரி பழங்களின் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கூடலூர் பகுதியில் குளுர்ச்சியான சூழல் நிலவி வருவதினால் 'மல்த்ஜியா' என்ற தாவரவியல் பெயரை கொண்ட இந்தியன் செர்ரி மரங்களில் அதிகளவில் காய்களும், பழங்களும் நிறைந்துள்ளதால், காண்போரை கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் இதை உட்கொள்வதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்என்றும், சக்கரை நோயாளிகளுக்கு இது உகந்தது என்றும், இந்த பழங்களை ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உட்கொள்ளக்கூடாது என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பழங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் குளிர்ச்சியாவதுடன், ஜலதோஷம் ஏற்படக் கூடும். இதனால் அளவோடு உட்கொள்ளலாம். இதையறிந்த அப்பகுதி மக்கள் இந்தப் பழத்தை அதிகளவில் வாங்கிச் செல்வதுடன், மரக் கன்றுகளை வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர்.