தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணும் பொங்கல்: உதகையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

உதகை: காணும் பொங்கலையொட்டி நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

By

Published : Jan 18, 2020, 9:33 AM IST

தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்துச் சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

குடும்பத்துடன் தாவரவியல் பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு உண்டு, பூங்காவில் உள்ள பூக்களை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்புப் படகுகளில் சவாரி சென்று உற்சாகமடைந்தனர்.

அதேபோல தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காட்சிமுனையில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி வழியாக உதகை நகரின் அழகை கண்டு ரசித்தனர்.அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் உதகையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:காணும் பொங்கலுக்காக குவிந்த சுற்றுலா பயணிகள்- களைகட்டும் சித்தன்னவாசல்.!

ABOUT THE AUTHOR

...view details