நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊராக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் மனிதக் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும், அந்த உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கபட்டது. இந்தப் பயிற்சி முகாமை தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி பேட்டி பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து மாநிலங்களிலும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து தர வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அபராதம் விதிப்பதை முழு வீச்சில் இன்னும் செயல்படுத்தவில்லை, ஓராண்டு காலத்திற்குப் பின்னர் இத்திட்டத்தை மக்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அபராதம் கட்டாயமாக விதிக்க உத்தரவிடப்படும்" என்றார்.
மேலும், குப்பைகளைக் கொளுத்துவதால் தற்போது வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுவதைக் கண்காணிக்க உத்தரவிடபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களைக் கண்காணிக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’