நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு, ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையக் கூடிய காய்கறிகள் மற்றும் வெள்ளைப் பூண்டு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வெள்ளை பூண்டு கிலோ ரூ150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளை பூண்டு சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட வெள்ளைப் பூண்டு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மழையில் நனைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.