தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நினைவு தூண் திறப்பு - Inauguration of memorial pillar in memory of those who died in service

குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜின் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

குன்னூர் வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் பணிபுரிந்து இறந்தவர்கள் நினைவாக நினைவு தூண் திறப்பு
குன்னூர் வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் பணிபுரிந்து இறந்தவர்கள் நினைவாக நினைவு தூண் திறப்பு

By

Published : Jul 1, 2022, 9:18 AM IST

நீலகிரி:சர்வதேச அளவில் புகழ் பெற்ற வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், உட்பட பல வெளிநாட்டு முப்படை அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்புடைய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர். 78வது பிரிவு வகுப்பில், நட்பு நாடுகளைச் சேர்ந்த 39 அலுவலர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர்.

11 மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அலுவலர்களுக்கு பாடத்திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம், சிறப்பு மிக்க இந்த பாதுகாப்பு கல்லூரியில் பணிபுரிந்தவர்கள் மற்றும் இங்கு சிவில் பணி செய்தவர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டது.

குன்னூர் வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் பணிபுரிந்து இறந்தவர்கள் நினைவாக நினைவு தூண் திறப்பு

லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிவில் பணியாளர்களில் இறந்தவர்கள் சார்பில் அவரது உறவினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: நீலகிரியில் தொடரும் மின்வெட்டு - இருளில் தவிக்கும் கிராமங்கள்!

ABOUT THE AUTHOR

...view details