நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி மத்தியில் பழங்குடியின மக்களான குரும்பர், பனியர், இருளர் போன்றவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் குழந்தைகள் குறைந்த அளவில் பள்ளிகளுக்குச் சென்றுவந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக இவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது.
நகர்ப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆண்ராய்டு போன் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படைய கூடாது எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு நவீனங்களின்றி எட்டாக் கனியான கல்வி! ஆனால் வனப்பகுதிகளுக்குள் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களிடையே போதிய விழிப்புணர்வும் வருமானமும் இல்லாததால் இங்குள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது எட்டாக்கனியாக உள்ளது.
இதனால் இவர்களின் கல்வித்தரம் பாதிப்படைந்துள்ளது. அதனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க...நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு