தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் மிருகங்களை காண குவியும் சுற்றுலா பயணிகள் - நீலகிரி மிருகங்கள்

நீலகிரி: முதுமலை சரணாலயத்தில் ஒரே நேரத்தில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட மிருகங்களை கண்டதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரியில் மிருகங்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்

By

Published : May 26, 2019, 11:36 PM IST


நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்குள்ள பூங்காக்களிலும், படகு இல்லத்தில் படகு சவாரியிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். முதுமலை சரணாலயத்தில் யானை சவாரி, வாகன சவாரி செய்ய சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வனப்பகுதிக்கு பசுமை திரும்பியுள்ளது. இதனால் இங்கு இடம் பெயர்ந்த யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட வனலிலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பல விலங்குகளை ஒரே சமயத்தில் கண்டதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரியில் மிருகங்களை காணக் குவியும் சுற்றுலா பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details