தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை!

நீலகிரி: குன்னூர் சேலாஸ் அருகே தனியார் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை!
சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை!

By

Published : Nov 7, 2020, 8:33 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் அங்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் சிறுத்தை இறந்துகிடப்பதை உறுதிசெய்தனர். ஐந்து வயதுடைய பெண் சிறுத்தை கழுத்தில் சுருக்கு கம்பி சிக்கி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை!

மேலும், சுருக்கு கம்பி வைத்து வன விலங்குகளை வேட்டையாடியவர்களை வனத்துறையினர் தேடிவருகின்றனர். சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு அதே பகுதியில் எரிக்கப்பட்டது.

இதையும் படிங்க...கன்னியாகுமரியில் கழுத்து அறுத்து முதியவர் கொலை!

ABOUT THE AUTHOR

...view details