தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கிய பொன்னார்! - Disaster Relief Services

நீலகிரி: கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மத்திய அமைச்சர்

By

Published : Aug 16, 2019, 11:59 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் முற்றிலும் பலரது வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது அப்பகுதி வாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், சமுதாயக் கூடங்களிலும் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று மழை குறைந்ததால் அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னார்

இதனிடையே இன்று கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசியும், சமையலுக்கு தேவையான பொருட்களையும் நிவாரணமாக வழங்கியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்பகுதியில் பலரது வீடுகள் மிகவும் மோசமாக இருப்பதால் நரேந்திர மோடி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details