நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் உணவுக்காக குடியிருப்புகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் குன்னுார் உபதலை ஊராட்சியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அருகே உள்ள கிணற்றில் இரு தினங்களுக்கு முன்பு இரண்டு காட்டெருமைகள் தவறி விழுந்ததுள்ளது. இதில் ஒரு காட்டெருமை கன்று கிணற்றிலே இறந்து விட்டதால் தாய் அதன் கன்றை விட்டு பிரிய மனமில்லாமல் கிணற்றிலேயெ இரண்டு நாட்களாக போதிய உணவின்றி தத்தளித்து வந்துள்ளது.
கிணற்றில் இறந்த கன்றுடன் 2 நாட்கள் தாய் காட்டெருமை பாசப்போராட்டம் - குன்னுார் காட்டெருமை
நீலகிரி: குன்னுாரில் கிணற்றில் இறந்த கன்றை இரண்டு நாட்களாக விட்டு பிரியாமல் பாசப்போராட்டம் நடத்திய தாய்காட்டெருமையை சுமார் ஆறு மணிநேரம் போராடி வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்து தாய் காட்டெருமையை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். மலைப்பாங்கான பகுதியால் கடினமாக போகவே, உடனே ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சுமார் ஆறு மணிநேரத்திற்கு பிறகு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறந்த குட்டி காட்டெருமையை வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் தாய் காட்டெருமை வெளியே வர வழி ஏற்படுத்திக் கொடுக்கபட்டு அது மேலே வந்ததும், அருகேயுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. நீண்ட நேரம் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காட்டேஜ் குடியிருப்பு பகுதிக்குள் கிணற்றை திறந்த நிலையில் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.