நீலகிரியில் 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளை காட்டிலும், கடந்தாண்டில், பரவலாக பெய்த மழையால், கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் 6 கோடி கிலோவை எட்டியது. டிசம்பர் இறுதி வரை தினசரி சராசரியாக 25 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது உறைப் பனிப்பொழிவு காரணமாக, தேயிலை தோட்டங்களில் இலைகள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், தினசரி 5 ஆயிரம் கிலோ மட்டுமே இலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உறைப் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தேயிலை கொள்முதல் குறைய வாய்ப்புள்ளது.