தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விரோத கூடாரமாக மாறிய குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையம் - illigal use coonoor hall

நீலகிரி: குன்னூரில் பேரிடர் பாதுகாப்பு மையமானது சமூக விரோத கூடாரமாக மாறியுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையம்
குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையம்

By

Published : Dec 31, 2019, 5:26 PM IST


நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையமானது நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மையமானது சில மாதங்களுக்கு முன் அரசு போக்குவரத்து பணிமனையாகவும், விளையாட்டு அரங்கமாகவும் செயல்பட்டுவந்தது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் இதை பராமரிக்காமல் இருப்பதால், தற்போது இதன் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறியுள்ளது.

குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையம்

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த மையத்தை பராமரிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: குமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்களை அகற்ற கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details