தமிழ்நாடு

tamil nadu

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

குன்னூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை மீட்க நடந்த நான்கு மணி நேரம் போராட்டம் வீணானது.

By

Published : Jul 16, 2021, 9:04 AM IST

Published : Jul 16, 2021, 9:04 AM IST

ETV Bharat / state

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு
சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி ஜோதிநகர் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஜூலை 15) இரண்டு வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடுவதாக அப்பகுதி மக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை கம்பியில் சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். கால்நடை மருத்துவர், 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடும் சோர்வுடன் காணப்பட்ட சிறுத்தை நீண்ட போராடத்திற்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தது‌.

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

இது குறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், "அங்கு அமைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக நில உரிமையாளர்கள், அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார். சிறுத்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மிஸ் பண்ணாதீங்க: குஜராத்தில் பிரமாண்ட பூங்கா, அதிசயங்கள் நிறைந்த அரங்கம்...

ABOUT THE AUTHOR

...view details