தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனுமதியின்றி கேரளாவிற்குள் நுழைந்தால் 2 ஆண்டுகள் சிறை'

வயநாடு: தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதி வழியாக கேரளாவிற்கு நுழைபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆதிலா அப்துல்லா எச்சரித்துள்ளார்.

அனுமதியின்றி கேரளாவிற்கு நுழைந்தால் சிறை
அனுமதியின்றி கேரளாவிற்கு நுழைந்தால் சிறை

By

Published : Apr 21, 2020, 8:35 PM IST

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு, கேரள இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தை இணைக்கக் கூடிய ஏழு சாலைகள் மூலமாக போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவத் தேவைக்கு மட்டும் அலுவலர்களின் உத்தரவுக் கடிதம் பெற்றவர்கள் மட்டும் கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாலை மார்க்கமாக செல்லாமல் வனப்பகுதி வழியாகவும், இன்னும் பிற வழிகளிலும் வயநாடு மாவட்டத்திற்குள் அடிக்கடி சென்று வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.

அனுமதியின்றி கேரளாவிற்கு நுழைந்தால் சிறை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆதிலா அப்துல்லா, "நீலகிரி மாவட்ட பகுதியிலிருந்து வயநாடு மாவட்டத்திற்குள் அனுமதியின்றி மக்கள் நுழைந்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை

ABOUT THE AUTHOR

...view details