தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாளை முதல் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்!' - Nilagiri district news

நீலகிரி: சென்னை கோயம்பேட்டிலிருந்து நீலகிரி திரும்பிய லாரி ஓட்டுநர்கள் 43 பேரில் 33 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

nilgiri collector
nilgiri collector

By

Published : May 5, 2020, 6:56 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக, கடந்த மாதம் முழுவதுமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல வணிகர்கள், ஓட்டுநர்கள், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வுகளை தமிழ்நாடு அரசு கடந்த 2ஆம் தேதி அறிவித்தது. அதன்படி கட்டுப்பாடுகளுடன் சில கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எந்தவித தளர்வுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், வணிகர்களுடன் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருகின்ற 6ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடை நடத்துபவர்கள், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது 6ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும். ஏற்கெனவே, நடைமுறையில் உள்ளபடி தற்காலிக சந்தை செயல்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து நீலகிரி திரும்பிய லாரி ஓட்டுநர்கள் 43 பேரில் 33 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈ-பாஸ் பெறுவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அவசர தேவையைத் தவிர, யாருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது. மீறி செல்பவர்கள் அல்லது வருபவர்கள் எல்லையில் திருப்பியனுப்பப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க:கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 530 தொழிலாளர்கள் தனிமை

ABOUT THE AUTHOR

...view details