நீலகிரி: பிப்ரவரி 19ஆம் தேதி குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் சரவணகுமார் - லாவண்யா தம்பதியினர், அதிமுக சார்பில் தனித்தனி தொகுதிகளில் போட்டியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மூன்றாவது வார்டில் போட்டியிட்ட சரவணகுமார் 384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டது தொடர்பான காணொலி இதேபோன்று குன்னூர் 11ஆவது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவியான லாவண்யா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். குன்னூர் 11ஆவது வார்டில் ஐந்து பெண்கள் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், குன்னூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன், மனைவி வெற்றி