தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசியால் சமையலறையின் ஜன்னலை உடைத்து தள்ளிய யானை - பசியால் சமையலறையின் ஜன்னலை உடைத்து தள்ளிய யானை

பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் அருகே தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை சமையலறையின் ஜன்னலை உடைத்து தலையை உள்ளே விட்டு துதிக்கையால் உணவுகளை எடுத்து உண்ணும் வீடியோ வைராகி வருகிறது.

பந்திப்பூரில் பரபரப்பு
பந்திப்பூரில் பரபரப்பு

By

Published : Dec 16, 2021, 7:32 PM IST

நீலகிரி:முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தை ஒட்டி கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இந்த வன பகுதியிலிருந்து யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வன பகுதி அருகே உள்ள குடியிருப்பிற்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற காட்டு யானை, விடுதியின் சமையலறை ஜன்னலை தந்தங்களால் உடைத்து தலையை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்து உணவை தேடியுள்ளது. அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி உணவை துதிக்கையால் எடுத்து சாப்பிட விடுதியில் இருந்தவர்கள் சந்தம் எழுப்பியும், யானை அங்கிருந்து செல்லாமல் அரை மணி நேரம் கழித்து சென்றது.

பசியால் சமையலறையின் ஜன்னலை உடைத்து தள்ளிய யானை

விடுதியில் இருந்தவர்கள் பயந்து பதுங்கி இருந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:மாரிதாசுக்கு டிசம்பர் 30 வரை நீதிமன்ற காவல் - நெல்லை நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details