தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் நீலகிரியில் வீடுகள் இடிந்து சேதம் ! - தொடர்மழைக்கு இடிந்த வீடுகள்

நீலகிரி பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.

நீலகிரியில் வீடுகள் இடிந்து சேதம்
நீலகிரியில் வீடுகள் இடிந்து சேதம்

By

Published : Dec 7, 2020, 8:59 PM IST

நீலகிரி : குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதே போல் கடும் மேகமூட்டமும் காணப்படுவதால் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, குன்னூர் ஆற்றோர பகுதியான சித்தி விநாயகர் கோயில் தெருவில் இரண்டு வீடுகளும், உலிக்கல் பாரதிநகரில் இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் சித்தி விநாயகர் கோயில் தெருவில், ஒரு வீட்டிலிருந்த தாய், 3 குழந்தைகள் என 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சமீபத்தில் கேத்தி பிரகாஷபுரத்தில், தமிழ்நாடு முதலமைச்சரால், திறந்து வைக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், இன்னும் பயன்பாடுக்கு வராததால், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தங்குவதற்கு மாற்று இடமும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து கொடுக்காததால் கவலை அடைந்த மக்கள், அருகில் உள்ளவர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details