தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகையில் கோடை சீசனுக்கு தயாராகும் குதிரை பந்தய மைதானம்!

நீலகிரி: உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெறும் குதிரை பந்தயத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோடை சீசனுக்கு தயாராகும் குதிரைப்பந்தய மைதானம்

By

Published : Apr 1, 2019, 9:52 PM IST

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் குதிரை பந்தயம் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களிடமும்நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வருடமும் குதிரை பந்தயம் நடைபெறுவதையொட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, குதிரை பந்தயம் மைதானத்திற்கு 300-க்கும் மேற்பட்ட குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் குதிரைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கோடை சீசனுக்கு தயாராகும் குதிரைப்பந்தய மைதானம்

கோடை சீசனில் உதகையில் பல்வேறு சுற்றுலா தளங்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை புரிகின்றனர். இதில் குதிரை பந்தயத்தையும் காண அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஏப்ரல் 14ஆம் தேதிஅன்று தொடங்கும் குதிரை பந்தயத்திற்கு தற்போது குதிரைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து குதிரைகள் அழைத்து வரப்பட்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. தற்பொழுது புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியும், குடில்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details