தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையாளர்களின்றி நடைபெறும் புகழ்பெற்ற குதிரை பந்தயம்! - உதகை

முக்கிய பந்தயமான ‘நீலகிரி டர்பி’ மே 21ஆம் தேதியும், ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே 22ஆம் தேதியும் நடக்கின்றன. ஆண்டு தோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Horse race in ooty
Horse race in ooty

By

Published : Apr 12, 2021, 5:03 PM IST

நீலகிரி: கோடை விழாவின் ஆரம்பமாக உதகையில் குதிரை பந்தயங்கள் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தொடங்குகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதன்முறையாக இந்தாண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 134ஆவது குதிரை பந்தயங்கள் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தெடாங்கி இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்க பெங்களூர், சென்னை, பூனே உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்தாண்டு முதன்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் குதிரை பந்தயங்கள் நடக்கும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற குதிரை பந்தயங்கள் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இதில் முக்கிய பந்தயமான ‘நீலகிரி டர்பி’ மே 21ஆம் தேதியும், ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே 22ஆம் தேதியும் நடக்கின்றன. ஆண்டு தோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 500 குதிரைகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. 5 வெளியூர் பயிற்சியாளர்கள் உட்பட 26 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 50 ஜாக்கிகள் பங்கேற்கின்றனர்.

கடந்தாண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பார்வையாளர்கள் இல்லாமல் பந்தயங்கள் நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details