யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும். காட்டின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலை காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இந்த சோலை காடுகள் அதிகமுள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதேபோன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகளின் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.