ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - ராணுவ வீரர்களின் ஹோலி! - ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
நீலகிரி: குன்னூரில் ராணுவ வீரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - ராணுவ வீரர்களின் ஹோலி!
நாடெங்கும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக வாழ்த்துகள் தெரிவித்து, வண்ணப் பொடிகளைத் தூவி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.