தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூர்யாவைக் கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - நீட் தேர்வு

நீலகிரி: நடிகர் சூர்யாவைக் கண்டித்து குன்னூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து இளைஞர் முன்னணி
இந்து இளைஞர் முன்னணி

By

Published : Sep 22, 2020, 6:31 PM IST

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இதில் நீலகிரி மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பில், குன்னூரில்சூர்யாவைக் கண்டித்து விபி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், பொறுப்பாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை 4 மொழிகளைப் படிக்க வைத்து, ஏழை எளிய மாணவர்களை படிக்கவிடாமல் தடுக்கின்றனர்.

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு நீட் தேர்வே காரணம் எனத் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் ஆக்குகிறது எனக் குற்றஞ்சாட்டினர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக பேசிய சூர்யாவைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details