நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கியுள்ளதால், சமவெளி பகுதிகளில் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வருகிறது. இதனால், வெயிலில் இருந்து தப்பிக்க மலை வாசஸ்தலங்களுக்கு பலரும் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால், குன்னூர் சிம்ஸ்பூங்காவில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இங்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்படுகிறது.
குன்னூரில் ‘பார்க்கிங்’ கட்டணம் குறித்து புகார் - HIKE
நீலகிரி: குன்னூரில் சுற்றுலா மையங்களில் சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணமாக அதிகளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 120 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல் காவல்துறைக்கு 100 ரூபாய் வழங்க வேண்டுமென கூறி மொத்தமாக 250 ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு மேலும் கூடுதல் தொகை வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.