தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண் சரிவுகளுக்குத் தீர்வு காண புதிய முயற்சி' - இந்திய தொழில்நுட்ப கழகம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மண் சரிவைத் தடுக்கும் பணி

தமிழ்நாட்டில் முதல்முறையாக மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண் சரிவுகளுக்குத் தீர்வு காண இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மண் சரிவைத் தடுக்கும் பணி முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது என பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண் சரிவுகளுக்குத் தீர்வு காண புதிய முயற்சி
நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண் சரிவுகளுக்குத் தீர்வு காண புதிய முயற்சி

By

Published : Dec 22, 2021, 8:03 PM IST

நீலகிரி: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பகுதி வழியாகச் செல்கிறது.

இந்தச் சாலையில் உள்ள அழகிய மலைப் பகுதியைக் கண்டு களிக்க இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இவ்வழியாக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று (டிச.21) அப்பகுதிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவருடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இந்த ஆய்விற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஏற்காடு, போடி மெட்டு, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் வட கிழக்கு மற்றும் தென் மேற்குப்பருவ மழை நாட்களில் சாலையில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

நிலச்சரிவு மற்றும் மண்சரிவைத் தடுக்க தடுப்புச் சுவர் மற்றும் மார்பு சுவர் அமைக்கப்படுகிறது.

இருப்பினும் அதிக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பர்லியாறு முதல் நடுவட்டம் வரை ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகளுக்குத் தீர்வு காண, இந்திய தொழில்நுட்ப கழகப் பேராசிரியர் அயோத்திராமன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

இந்தக் குழுவைக்கொண்டு (நவீனத் தொழில்நுட்ப வடிவமைப்புடன் கூடிய மண் உறுதிப்படுத்தும் திட்டம்) ஒன்று மரப்பாலம் அருகில் 30 மீட்டர் அகலம் 26 மீட்டர் உயரம் கொண்டு, முதல் முறையாகக் கட்டப்பட உள்ளது.

இந்த இடங்களில் மண் மாதிரிகள் சேகரித்து அவற்றின் தன்மைகள் ஆகிய ஆய்வுகளின் அடிப்படையில் புவியீர்ப்பு கேபியன் தடுப்புச் சுவர் மற்றும் நங்கூர ஆணியுடன் மெல்லிய கம்பி வலை கொண்ட தடுப்புச் சுவர், மண் சரிவில் நீர் உட்புகாத நவீனத் தொழில்நுட்ப முறையில் வளர்க்கப்படும் தாவரங்களைக் கொண்டு மண் சரிவைத் தடுக்கும் முறை பணி முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 284 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,101 நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உடனிருந்தார்.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் போல முகேனுக்கு எதிர்காலம் உண்டு - சூரி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details