தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்து நடந்த ஹெலிகாப்டர் இன்ஜின்கள் பிரிப்பதற்கான ஆய்வு - நீலகிரி செய்திகள்

குன்னூரில் விபத்து நடந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் இன்ஜின்களைப் பிரிப்பதற்கான ஆய்வுப்பணி நடைபெற்றது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

By

Published : Dec 17, 2021, 12:13 PM IST

நீலகிரி:குன்னூர்நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிகளிலிருக்கும் பொருள்களை விமான படையினர், காவல் துறையினர் சேகரித்து தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவருகின்றனர்.

ஹெலிகாப்டர் இன்ஜின்

அதுமட்டுமின்றி விமானத்தின் பாகங்கள் உடைக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டுவருகிறது. மேலும் இடத்தில் ஆய்வுகள் செய்து சாம்பலில் உள்ள பொருள்களைச் சேகரித்துவருகின்றனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் இரண்டு இன்ஜின்கள் அங்கிருந்து நகர்த்தப்பட்டன. மேலும் அதனைப் பிரித்து எடுத்துச் செல்வது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வருண் சிங்கிற்கு மாணவிகள் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details