நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, முள்ளம்பன்றி உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புப் பகுதிகளில் இன்று அதிகாலை (ஏப். 7) கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி ஒன்று புகுந்தது. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர்.