நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் இரண்டு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதன்காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துப் பாதிப்படைந்துள்ளது.
குன்னூரில் கடும் பனிமூட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - நீலகிரி மாவட்டச் செய்திகள்
நீலகிரி: குன்னூரில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
![குன்னூரில் கடும் பனிமூட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு coonoor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6274523-thumbnail-3x2-l.jpg)
coonoor
குறிப்பாக அதிகாலையில், கேரட், தேயிலை, காப்பி தோட்டப் பணிகளுக்குச் செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலையோர வியாபாரிகள், நடை வியாபாரிகளின் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
குன்னூரில் கடும் பனிமூட்டம்
இதையும் படிங்க:22 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர் !