நீலகிரி மாவட்டம், குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், குன்னூர் அருகேயுள்ள பழைய அருவங்காடு பகுதியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து 3 வீடுகள் சேதமடைந்தன.
ராஜன் என்பவரது வீட்டில் வெள்ள நீர் புகுந்ததால், வாஷிங் மிஷின், தொலைக்காட்சி போன்ற மின்சாதனப் பொருள்களும் சேதமடைந்தன. மேலும் வெள்ள நீர் வீட்டினுள் சூழ்ந்ததால், ஐந்து பேர் கொண்ட அக்குடும்பத்தினர் அனைவரும் மாடியில் தஞ்சமடைந்தனர். இதைப்போல, சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள கடைகள், விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.