தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் 283 அபாயகரமான நிலச்சரிவு பகுதிகள் கண்டுபிடிப்பு!

நீலகிரி: நீலகிரியில் 283 அபாயகரமான நிலச்சரிவு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

nilgiri
nilgiri

By

Published : Aug 5, 2020, 12:11 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பருவ மழை தீவரமடைந்துள்ளது. உதகை, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் லேசான மழையும், இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூரில் பெய்த கராணத்தால் பொன்மனவயல், வேடன்வயல், புரமணவயல் ஆகிய இடங்களில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசெனட் திவ்யா, "வானிலை ஆய்வு மையம் வரும் 8ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் 283 அபாயகரமான நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 5 முகாம்கள் அமைக்கபட்டு அதில் 500 பேர் தங்கவைக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகாக 300 தங்கும் மையங்கள் தயார்படுத்தபட்டுள்ளன. மாயார் மற்றும் புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்" என தெரிவித்தார்.

நீலகிரியில் மழை

இதையும் படிங்க:குவியும் இன்ஜினியரிங் அப்ளிகேஷன்! மாணவர்கள் ஆர்வம்

ABOUT THE AUTHOR

...view details