உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் வழியிலேயே இடைமறித்து, தாக்கி கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநில முதலமைச்சர் தூண்டுதலின் பெயரில் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடு ஜனநாயக விரோதம், அப்பட்டமான மனித உரிமை மீறல் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டும் எனவும் காவல்துறையின் போக்கை கண்டித்தும் சத்தியாகிரக முறையில் அறவழிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது.