தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆகஸ்ட் மாதத்திற்கான பச்சைத் தேயிலை விலை நிர்ணயம்! - Green Tea

நீலகிரி: சிறு தேயிலை தொழிற்சாலைகளில் அனைத்தும் சிறு விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாத பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு விலையாக 20 ரூபாய் 99 பைசா வழங்க வேண்டும் என தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Green Tea Price Fixed for August
Green Tea Price Fixed for August

By

Published : Aug 2, 2020, 8:26 PM IST

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சிறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பறித்து தேயிலை தொழிற் சாலைகளுக்கு கொடுக்கும் பச்சை தேயிலைக்கு விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வந்த நிலையில் சிறு தேயிலை விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கு தீர்வாக 2015ஆம் ஆண்டு பச்சை தேயிலை விலை நிர்ணய கமிட்டியை அமைக்க மத்திய அரசு அறிவுரை வழங்கியது. இதன்பேரில் மாவட்ட ஆட்சியர் தலைவராக கொண்டு தேயிலை வாரிய துணை இயக்குநர் மற்றும் சிறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தேயிலை விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மாதம்தோறும் மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் வாரம்தோறும் நடைபெறும் ஏலத்தில் விற்பனை விலை கொண்டு சராசரி விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது குறித்து இந்த மாதத்திற்கான தேயிலை விலை பற்றி தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகளில் அனைத்தும் சிறு விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாத பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு விலையாக 20 ரூபாய் 99 பைசா வழங்க வேண்டும்'' என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வெளி நபர்களுக்கு அனுமதி மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details