நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து-குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து கோத்தகிரி கேபிஎஸ் கல்லூரி அருகே சென்றபோது ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலை எதிரே உள்ள மண் சுவற்றில் மோதியது.
இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த பேருந்து ஒட்டுநர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.