தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மஞ்சூர் ஒணிகண்டி பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள், வேட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சமுதாயக் கூடத்திற்கு சீல் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வேட்டி, சேலைகளுடன் அதிமுக குந்தா ஒன்றியச் செயலாளர் வசந்தராஜ் வாகனத்தை திமுகவினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.