நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே 60 ஆண்டுகள் பழமையான காந்தி மண்டபம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெறிவித்துள்ளனர்.
சமூக விரோத செயல்களின் இடமாக மாறிய காந்தி மண்டபம்! - hall
நீலகிரி: குன்னூரில் உள்ள 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த காந்தி மண்டபம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் உடைக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும், மது அருந்துபவர்களின் கூடாரமாக இப்பகுதி மாறி வருகிறது எனவும், இதுகுறித்து தனியார் அமைப்புகள் பலமுறை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. நம் நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி மண்டபத்தில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குன்னூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மண்டபத்தை சீரமைத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.