நீலகிரி மாவட்டத்தில் தற்போது பழங்களுக்கான பருவகாலம் தொடங்கியுள்ளது. இதில் பலாப்பழம், பச்சை ஆப்பிள், மங்குஸ்தான் போன்றவைகளுடன் அரியவகைப் பழங்களும் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான காட்டேரி பழப்பண்ணையில் முதல்முறையாக அன்னாச்சிப்பழங்களைச் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அறுவடைக்குத் தயாராக இந்தப் பழங்கள் இருந்துள்ளன.
பழத் தோட்டத்தை பதம் பார்த்தது காட்டு யானைகள் இந்நிலையில் சமவெளிப் பகுதியிலிருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டமாக காட்டேரி பழப் பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த பழங்களை சேதப்படுத்தியிருக்கின்றது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே விவசாய நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிக்குள்ளும் புகும் காட்டு யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட அரசும், வனத் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.