தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் இலவச மருத்துவ முகாம்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - குன்னூரில் இலவச மருத்துவ முகாம்

நீலகிரி: குன்னூர் பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.

இலவச மருத்துவ முகாம்

By

Published : Aug 19, 2019, 4:31 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் டேன்டீ நிர்வாகமும் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தினர். நீலகிரி உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார். இந்த முகாமில் கண் சிகிச்சை, புற்றுநோய், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை, பெண்களுக்கான கர்ப்பப்பை சிகிச்சை, ஆர்த்தோ பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

குன்னூரில் இலவச மருத்துவ முகாம்...

இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 120க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும், பத்திற்கும் மேற்பட்டோருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை செல்ல பரிந்துரை செய்யப்பட்டது. நீலகிரியை கண் குறைபாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க, தொடர்ந்து பல இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details