நீலகிாி மாவட்டம் குன்னூரில் தற்போது கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக முக கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி முக கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், குன்னூரில் தனியார் நிறுவனம் சாா்பில் முக கவசங்கள், கோவிட் -19 வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு முக கவசங்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.