தமிழ்நாடு

tamil nadu

தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்லும் வகையில், முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

By

Published : Jul 3, 2021, 7:22 PM IST

Published : Jul 3, 2021, 7:22 PM IST

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை
ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

நீலகிரி: தமிழ்நாடுவனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், குன்னூரில் இன்று (ஜூலை.3) ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார்.

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளே உள்ளதால், அங்கு ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் நோயாளிகளைச் சுமந்து வந்து, பிரதான சாலையில் உள்ள ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தன்னார்வலரின் தன்னலமற்ற முயற்சி

இதைத் தவிர்ப்பதற்காக, குன்னூர் வண்டிச்சோலையைச் சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி, தன் சொந்த முயற்சியில், 6 ஆட்டோ ஆம்புலன்ஸை இலவசமாக வழங்கியுள்ளார்

தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி

கரோனா தொற்று நோயாளிகளை எளிதில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் இருந்து தயாரித்து கொண்டுவரப்பட்டது.

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

குன்னூரில் தொடங்கிய சேவை

சுமார் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 6 வாகனங்கள் தற்போது குன்னூர், கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

ABOUT THE AUTHOR

...view details