தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கம்பியில் சிக்கி 4 வயது யானை உயிரிழப்பு - யானை உயிரிழப்பு

நீலகிரியில் மின் கம்பியில் சிக்கி நான்கு வயது ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது யானை உயிரிழப்பு
4 வயது யானை உயிரிழப்பு

By

Published : Aug 12, 2021, 6:31 PM IST

நீலகிரி: கூடலூரை அடுத்த கொளப்பள்ளியைச் சேர்ந்தவர், வர்கீஸ். இவர், தனது நிலத்தில் சோலார் மின்வேலி அமைத்து விவசாயம் செய்து வந்தார்.

யானை உயிரிழப்பு

அந்த விவசாய நிலத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த யானையைப் பரிசோதனை செய்தனர்.

சோதனையில், அது நான்கு வயதுடைய ஆண் யானை என்பதும் வாயில் கம்பி சிக்கிய நிலையில் இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டது.

இதன்மூலம் விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க, சோலார் மின் கம்பி அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சிக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது.

வனத்துறை எச்சரிக்கை

மேலும், யானையின் உடற்கூராய்வுக்குப் பிறகு, இறப்புக்கான முழு விவரங்களும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானை இறப்புக்குக் காரணமாக இருந்த நிலத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற செயல்களில் இனி, ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:யானைகளின்றி காடுகள் இல்லை... காடுகளின்றி எந்த உயிர்களும் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details