நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன்-கீதா தம்பதி. இவர்களுக்கு ரஷித்தா என்ற மகளும், விஸ்வந்தர் என்ற மகனும் இருந்தனர். இவர்களின் வீடு கடந்த இரண்டு நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்திரன் அவரது மனைவி கீதா இருவரும் தூக்கிட்ட நிலையிலும், குழந்தைகள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்த நிலையில் இருந்தனர்.