தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி சென்ற எட்டு பேரில் நால்வருக்கு கரோனா அறிகுறி! - 8 பேரில் 4 பேருக்கு கரோனா அறிகுறி

நீலகிரி: டெல்லி மாநாட்டில் பங்கேற்று நீலகிரிக்கு வந்துள்ள எட்டு பேரில் நான்கு பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதால் அவர்கள் தங்கியிருக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டது.

நீலகிரியில் நான்குபேருக்கு கரோனா அறிகுறி
நீலகிரியில் நான்குபேருக்கு கரோனா அறிகுறி

By

Published : Apr 1, 2020, 4:00 PM IST

Updated : Apr 1, 2020, 4:09 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசால் இதுவரை 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பிய 1,131 பேரில் 47 பேர் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பிய பெரும்பாலோனாருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலிருந்து எட்டு பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி வந்துள்ளனர். தற்போது இந்த எட்டு பேரும் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என்பதால் அவர்களின் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி சீல் வைக்கபட்டுள்ளது.

நீலகிரியில் நான்கு பேருக்கு கரோனா அறிகுறி

இரண்டு பேர் உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன்று காலை காந்தல் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. காந்தல் பகுதியில் முகாமிட்டுள்ள சுகாதாரத் துறை அலுவலர்கள் 120 சுகாதார பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அப்பகுதியில் உள்ள 2,100 வீடுகளில் இருப்பவர்களைக் கண்காணிக்க ஐந்து மருத்துவர்கள் தலைமையில் சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டில் 1, 637 பேருக்கு கரோனா பாதிப்பு, 38 பேர் உயிரிழப்பு

Last Updated : Apr 1, 2020, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details