தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹாக்கி போட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள்! - tamil news

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற ஹாக்கி வீரர்களை ஒன்றிணைக்கும் விதமாக சிறப்பு போட்டி நடைபெற்றது.

ஹாக்கி போட்டி
ஹாக்கி போட்டி

By

Published : Feb 25, 2020, 12:17 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ராணுவ பயற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பயற்சி பெறும் ராணுவ வீரர்கள் நாட்டின் பல இடங்களிலும் பணிபுரிந்துவருகின்றனர். இதில் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பணிகளில் உள்ளனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஹாக்கி வீரர்களை ஒன்றிணைக்கும் விதமாக நீலகிரியில் உள்ள ஹாக்கி வீரர்கள் மூலமாக, 40க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குள் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் அனைவரும் சிறப்பாக விளையாடி அசத்தினர்.

ஹாக்கி போட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள்

மேலும், போட்டியில் வெற்ற பெற்ற நீலகிரி லெவன்ஸ் அணிக்கு எம்.ஆர்.சி முன்னாள் கர்னல் மார்ட்டின், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூடுதல் பொது மேலாளர் டேனியல் ஆகியோர் வீரர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினர். விளையாட்டிற்கு வயது ஒரு தடை இல்லை எனவும் ராணுவ வீரர்கள் இளைஞர்களுக்கு புரியவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:'தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது' - ட்வீட் செய்த இவாங்கா ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details