உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி சிங்காரா வனப்பகுதி உள்ளதாலும் எஸ்டேட் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதாலும் காட்டு யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் எஸ்டேட் பகுதியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துவருகின்றன.
இந்த நிலையில், அந்த எஸ்டேட்டில் உள்ள பாழடைந்த தண்ணீர்த் தொட்டியில் கரடி ஒன்று தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் சத்தமிட்டுக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு சென்றுபார்த்த தொழிலாளர்கள் இது குறித்து உடனடியாக சிங்காரா வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.