நீலகிரி: கூடலூர் பகுதியிலும் மசினகுடி பகுதியிலும் தொடர்ந்து நான்கு மனிதர்களையும் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற T23 புலி, 20 நாட்களாக வனத்துறையினரின் கைகளில் சிக்காமல் இருந்தது.
கூடலூர் பகுதிக்கும் மசினகுடி வனப்பகுதிக்கும் இடம்மாறி புலி சென்றதால், ஒட்டுமொத்த வனத்துறைக்கும் புலியைப் பிடிப்பதில் பெரும் சவால் நீடித்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் கூடலூர் தேவன் எஸ்டேட், நம்பிக்குன்னு பகுதிக்கும்; அதைத்தொடர்ந்து நேற்று இரவு மசினகுடி வனப்பகுதிக்கும் T23 புலி இடம்பெயர்ந்தது.
ஆறு மணிநேர தேடல்
இதையடுத்து நேற்று இரவு இந்தப் புலிக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அப்போதும் புலி வனத்துறைக்குப் பிடிபடாமல் தப்பித்தது. இன்று அதிகாலை முதுமலை செல்லும் வனச்சோதனை சாவடி அருகே காலை 10 மணி அளவில் சாலையைக் கடந்த புலியை வனத்துறையினர் கண்டனர். உடனடியாக, புலியை பின்தொடர்ந்தனர்.
21 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த T23 புலி இதையடுத்து சுமார் ஆறு மணிநேர தேடுதலுக்குப் பிறகு, புலிக்கு மயக்க ஊசி செலுத்தி, வனத்துறையினர் புலியைப் பிடித்தனர்.
இதையடுத்து புலி பிடிபட்ட இடத்திலிருந்து வனத்துறையினரால் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. தற்பொழுது புலியைக் கொண்டுவரும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:’நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவு’ - பூவுலகின் நண்பர்கள் கண்டனம்